புதன்கிழமை 20 மார்ச் 2019

போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்: மாநகராட்சி எச்சரிக்கை

DIN | Published: 19th February 2019 04:23 AM


சென்னையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளின் ஓரத்தில் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது. 
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட சாலைகளின் ஓரத்தில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனம், ஆட்டோ, கார் உள்ளிட்டவை நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, மாநகராட்சிக்கு உள்பட்ட சாலைகள், நடைபாதைகள், தெருக்களில் நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7,682 இருசக்கர வாகனங்கள், 90 ஆட்டோக்கள், 103 கார்கள் என மொத்தம் 7,875 வாகனங்கள் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 2.21 கோடிக்கு ஏலம் விடப்பட்டன. இந்தத் தொகையில் காவல்துறை சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிக்காக ரூ.1.60 கோடியை மாநகராட்சி வழங்கியது.
எச்சரிக்கை: இரண்டாவது கட்டமாக 1,510 இருசக்கர வாகனங்கள், 51 ஆட்டோக்கள், 13 கார்கள் என மொத்தம் 1,574 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் விரைவில் ஏலம் விடப்பட உள்ளன. சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பழுதடைந்த, உபயோகமற்ற வாகனங்கள் மீது மாநகராட்சி வரிசை எண்ணுடன் கூடிய நோட்டீஸ் ஒட்டப்படும். அதையடுத்து  15 நாள்களுக்குள் உரிமை கோரப்படாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அலுவலகம் எச்சரித்துள்ளது.

More from the section

துணை வாக்காளர் பட்டியல் பணி மார்ச் 26-க்குள் முடிவடையும்: மாநகராட்சி ஆணையர் ஜி.பிரகாஷ்
பெண் பயணிகள்  பாதுகாப்புக்காக குறும்படம் வெளியீடு
மு.க.ஸ்டாலினுடன் வைகோ சந்திப்பு
சென்னையிலுள்ள 3  தொகுதிகளுக்கு செலவினப் பார்வையாளர்கள் நியமனம்
மக்களவைத் தேர்தல்: ரௌடிகள் கைது நடவடிக்கை தீவிரம்