புதன்கிழமை 20 மார்ச் 2019

மெட்ரோ ரயில் பயணிகளுக்காக வாடகை ஸ்கூட்டர் சேவை

DIN | Published: 19th February 2019 04:25 AM


சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் வசதிக்காக வாடகை ஸ்கூட்டர் சேவை நிமிடத்துக்கு ரூ.1.20 கட்டணத்தில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், சென்ட்ரல்-பரங்கிமலை, வண்ணாரப்பேட்டை-விமானநிலையம் என்று மொத்தம்  45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படுகிறது. மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்காக வாடகை சைக்கிள், வாடகை கார், வாடகை ஆட்டோ உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மெட்ரோ ரயில் பயணிகளுக்காக வாடகை ஸ்கூட்டர் சேவையை வோகோ நிறுவனத்துடன் இணைந்து மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. நிமிடத்துக்கு ரூ.1.20 கட்டணத்தில் வாடகை ஸ்கூட்டர் சவாரியை மெட்ரோ ரயில் பயணிகள் பெற்றுக் கொள்ளலாம். செல்லிடப்பேசியில் ஸ்கூட்டர் ரெண்டல் செயலியை பதிவேற்றம் செய்வது மூலமாக தொடங்கும் இடம், முடியும் இடம் பதிவிட்டு ஓ.டி.பி. எண் மூலம் இந்த வசதியை பெறலாம். வாடகை ஸ்கூட்டர் வசதியை பயன்படுத்திய பின்னர் ஸ்கூட்டரை ஒப்படைக்கும் போது, பயணித்த தொலைவைக் கணக்கிட்டு பணம் செலுத்தலாம். கியூ ஆர் கோடு மூலமும் இந்த வசதியை பெற முடியும்.

More from the section

துணை வாக்காளர் பட்டியல் பணி மார்ச் 26-க்குள் முடிவடையும்: மாநகராட்சி ஆணையர் ஜி.பிரகாஷ்
பெண் பயணிகள்  பாதுகாப்புக்காக குறும்படம் வெளியீடு
மு.க.ஸ்டாலினுடன் வைகோ சந்திப்பு
சென்னையிலுள்ள 3  தொகுதிகளுக்கு செலவினப் பார்வையாளர்கள் நியமனம்
மக்களவைத் தேர்தல்: ரௌடிகள் கைது நடவடிக்கை தீவிரம்