சனிக்கிழமை 23 மார்ச் 2019

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு: சென்னையில் நாளை இலவசக் கருத்தரங்கம்

DIN | Published: 22nd February 2019 03:56 AM


ஐஏஎஸ்,  ஐபிஎஸ் தேர்வுகளுக்கு வழிகாட்டும் இலவச கருத்தரங்கம் சென்னை அண்ணாநகரில் உள்ள கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாதெமியில்  சனிக்கிழமை காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. 
இதுகுறித்து அம்மைய இயக்குநர் சத்ய ஸ்ரீ பூமிநாதன் வெளியிட்டுள்ள செய்தி:  நிகழாண்டு நடைபெறவுள்ள ஐ.ஏ.எஸ்.,  ஐ.பி.எஸ்.,  ஐ.எஃப்.எஸ்.,  தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாதெமியில் கடந்த ஜனவரி முதல் நடைபெற்று வருகிறது.  வார நாள்கள் மற்றும் வார இறுதி நாள்களுக்கான வகுப்புகள் மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 15-ஆம் தேதிகளில் தொடங்குகிறது.
ஆட்சிப் பணித் தேர்வுகளில் சாதிக்க விரும்பும் மாணவர்களுக்கான இலவச வழிகாட்டும் நிகழ்ச்சிக்கு அகாதெமி ஏற்பாடு செய்துள்ளது. இதில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஜவஹர்,  விவேக் ஹரி நாராயணன்,  கிங் மேக்கர்ஸ் மையத்தில் பயின்ற இந்தியாவின் முதல் பார்வையற்ற பெண் அதிகாரி  பெனோ ஜெபைன் ஐஎஃப்எஸ் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். கட்டணச் சலுகை பெறுவதற்கான தேர்வில் பங்கேற்று 100 சதவீதம் வரை கட்டணச் சலுகை பெறலாம். 
இதில் பங்குபெற, 94442 27273 என்ற எண்ணுக்கு பெயர், கல்வித் தகுதி, தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களை குறுஞ்செய்தி மூலம் அனுப்பிப் பதிவு செய்து கொள்ளலாம்.
 

More from the section

சென்னையில் 18 வேட்பாளர்கள் மனு தாக்கல்
ரூ. 40 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்
மக்களவைத் தேர்தல் வாகன சோதனை: ஒரே நாளில் 8 கிலோ தங்கம், 83 கிலோ வெள்ளி, ரூ.62 லட்சம் பறிமுதல்
காலமானார் ஜி.ஆண்டாள்
அதிமுக கூட்டணி வேட்பாளர்களின் சொத்து மதிப்பு