சனிக்கிழமை 23 மார்ச் 2019

சென்னை மாநகராட்சி ஆணையராக ஜி.பிரகாஷ் பொறுப்பேற்பு

DIN | Published: 22nd February 2019 04:01 AM


பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையராக ஜி.பிரகாஷ் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றி வந்த தா.கார்த்திகேயன், நகராட்சி நிர்வாக ஆணையராகவும்,  நகராட்சி நிர்வாக ஆணையராகப் பணியாற்றி வந்த ஜி.பிரகாஷ் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையராகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.  இதைத் தொடர்ந்து,  சென்னை மாநகராட்சி ஆணையராக ஜி.பிரகாஷ் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு முன்னாள் ஆணையர் தா.கார்த்திகேயன்,  மாநகராட்சி இணை ஆணையர்கள், மண்டல அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் வாழ்த்துத் தெரிவித்தனர்.
 

More from the section

சென்னையில் 18 வேட்பாளர்கள் மனு தாக்கல்
ரூ. 40 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்
மக்களவைத் தேர்தல் வாகன சோதனை: ஒரே நாளில் 8 கிலோ தங்கம், 83 கிலோ வெள்ளி, ரூ.62 லட்சம் பறிமுதல்
காலமானார் ஜி.ஆண்டாள்
அதிமுக கூட்டணி வேட்பாளர்களின் சொத்து மதிப்பு