புதன்கிழமை 20 மார்ச் 2019

காவல் துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

DIN | Published: 19th February 2019 04:17 AM


மாமல்லபுரத்தை அடுத்த கடம்பாடி கிராமத்தில் காவல்துறை சார்பில் சட்டம்- ஒழுங்கு, போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. 
மாமல்லபுரம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கடம்பாடி கிராமத்தில், காவல் ஆய்வாளர் ரவிக்குமார், உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசு ஆகியோர் தலைமையில், திங்கள்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் சட்டம்- ஒழுங்கு, போக்குவரத்து விதிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 
இதில், கிராமத்தில் படித்தவர்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். சட்டத்துக்குப் புறம்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது. கிராமத்தில் சந்தேகத்துக்கு உரிய நபர்கள் நடமாட்டம் இருந்தால் காவல்துறைக்கு உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும்; இதன்மூலம் குற்றச்செயல்களை தடுக்கமுடியும். பொதுமக்கள் ஒத்துழைப்போடு சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க முடியும் என்று கிராமத்தினருக்கு போலீஸார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 
இதையடுத்து, அசாதாரண சூழ்நிலைகளில் காவல்துறைக்கு எவ்வாறு உதவி செய்யவேண்டும், சாலை விதிமுறைகளை மதித்து, விபத்துகளைத் தடுக்கவேண்டும். வாகனங்களை பாதுகாப்பாக ஓட்டி விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க உதவவேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை ஆய்வாளர் ரவிக்குமார் வழங்கினார். இந்த முகாமில் சிறுவர்கள், பெண்கள், இளைஞர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.
 

More from the section

பெண்களிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது: 27சவரன் நகை பறிமுதல்
காவல் மாணவர் படை சார்பில் தேர்தல் விழிப்புணர்வுப் பேரணி
கூட்டணிக் கட்சியினரிடம் ஆதரவு திரட்டிய மரகதம் குமரவேல்
கூட்டணிக் கட்சியினரிடம் ஆதரவு திரட்டிய பாமக வேட்பாளர்
முதல் நாளில் வேட்பு மனு தாக்கல் இல்லை