புதன்கிழமை 20 மார்ச் 2019

மக்களவைத் தேர்தல்: 52 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

DIN | Published: 19th February 2019 04:17 AM


மக்களவைத் தேர்தலையொட்டி, காஞ்சிபுரம் சரகத்தில் 52 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் திங்கள்கிழமை தெரிவித்தார்.
வரும் மக்களவைத் தேர்தலையொட்டி காஞ்சிபுரம் காவல்துறை சரகத்துக்கு உள்பட்ட  காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த காவல் ஆய்வாளர்கள் 52 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  
அதன்படி, காஞ்சிபுரம் சிவகாஞ்சிக்கு ரஜினிகாந்த், ஆயுதப்படைப் பிரிவுக்கு செல்வராஜ், ஸ்ரீபெரும்புதூர் - பரிபூரணம் (மகளிர்), நாகராஜன் (போக்குவரத்து), மணிமங்கலம் ராதாகிருஷ்ணன், படாளம் பாலசுப்பிரமணி, கேளம்பாக்கம் வெங்கடாசலம், மதுராந்தகம் - செல்லத்துரை (போக்குவரத்து),  கூடுவாஞ்சேரி - சீதாராமன் (போக்குவரத்து), மாமல்லபுரம் -  தேசிகன், வசந்தா (மகளிர்), மேல்மருவத்தூர் - ஞானசேகரன், செங்கல்பட்டு நகரம் - அந்தோணி ஸ்டாலின் உள்ளிட்ட 52 பேரை பணியிடமாற்றம் செய்து காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் தேன்மொழி உத்தரவிட்டுள்ளார்.

More from the section

பெண்களிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது: 27சவரன் நகை பறிமுதல்
காவல் மாணவர் படை சார்பில் தேர்தல் விழிப்புணர்வுப் பேரணி
கூட்டணிக் கட்சியினரிடம் ஆதரவு திரட்டிய மரகதம் குமரவேல்
கூட்டணிக் கட்சியினரிடம் ஆதரவு திரட்டிய பாமக வேட்பாளர்
முதல் நாளில் வேட்பு மனு தாக்கல் இல்லை