புதன்கிழமை 20 மார்ச் 2019

ரூ.62 லட்சம் மதிப்பிலான புதிய கட்டடங்களுக்கு அடிக்கல்

DIN | Published: 22nd February 2019 03:36 AM


காஞ்சிபுரத்தில் கோட்டாட்சியர் அலுவலகக் கட்டடம், தடுப்பூசி மருந்துக் கிடங்கு ஆகிய புதிய கட்டடங்களுக்கு ஆட்சியர் பா.பொன்னையா வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகக் குடியிருப்பு வளாகத்தில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் கோட்டாட்சியர் அலுவலகமும், காஞ்சிபுரத்தை அடுத்த கோனேரிக்குப்பம் பகுதியில்  ரூ.30 லட்சம் மதிப்பீட்டில்  தடுப்பு ஊசி மருந்துக் கிடங்கு ஆகியவை கட்டப்படவுள்ளன. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, ஆட்சியர் பா.பொன்னையா தலைமை வகித்து அடிக்கல் நாட்டினார். இதில்,  சார்- ஆட்சியர் சரவணன், முன்னாள் எம்எல்ஏ வாலாஜாபாத் பா.கணேசன், மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் ஜீவா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் செந்தில்குமார், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் ஞானமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

More from the section

பெண்களிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது: 27சவரன் நகை பறிமுதல்
காவல் மாணவர் படை சார்பில் தேர்தல் விழிப்புணர்வுப் பேரணி
கூட்டணிக் கட்சியினரிடம் ஆதரவு திரட்டிய பாமக வேட்பாளர்
முதல் நாளில் வேட்பு மனு தாக்கல் இல்லை
கூட்டணிக் கட்சியினரிடம் ஆதரவு திரட்டிய மரகதம் குமரவேல்