சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

இன்று குடும்ப அட்டைதாரர் குறை தீர் முகாம்

DIN | Published: 19th January 2019 03:27 AM


காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கான குறைதீர்முகாம் சனிக்கிழமை (ஜன. 19) நடைபெறவுள்ளது
இதுகுறித்த விவரம்:  உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 9 வட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடத்தப்படவுள்ளது. இந்தச் சிறப்பு கூட்டத்தில், மின்னணு குடும்ப அட்டை தொடர்பான குறைகளுக்குத் தீர்வு காணப்படும். 
அதன்படி, காஞ்சிபுரத்தில் விஷார் (9445000169-வட்ட வழங்கல் அலுவலரின் செல்லிடப்பேசி எண்), ஸ்ரீபெரும்புதூரில் சோகண்டி (9445000170), உத்தரமேரூரில் புள்ளப்பாக்கம் (9445000171), செங்கல்பட்டில் ஆலப்பாக்கம் (9445000172), திருக்கழுகுன்றத்தில் தாழம்பேடு(9445000173), திருப்போரூரில் கேளம்பாக்கம் (8838330697), மதுராந்தகத்தில் கள்ளபிரான்புரம் (9445000174), செய்யூரில் முகையூர்(9445000175), வாலாஜாபாத் சிறுபகல் (9952912646) ஆகிய வட்டத்துக்குட்பட்ட கிராமங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

More from the section

பேருந்துகளை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்
அனுமதியின்றி பேனர்கள் வைத்தால் குற்றவியல் நடவடிக்கை
மகளிர் கல்லூரி ஆண்டு விழா
பிப்.28-இல் சமையல் எரிவாயு வாடிக்கையாளர் முகாம்
அம்மா திட்ட முகாம்