சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

ஏகாம்பரநாதர் கோயில் விவகாரம்: விசாரணை அதிகாரியிடம் மனு

DIN | Published: 19th January 2019 03:27 AM


ஏகாம்பரநாதர் கோயில் சோமாஸ்கந்தர் புதிய சிலை விவகாரத்தில் குற்றவாளிகள் ஆதாரங்களை அழித்தும், சாட்சியங்களைக் கலைத்தும் மிரட்டி வருவதாகக் கூறி மனுதாரர் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு விசாரணை அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
இதுகுறித்து மனுதாரரும் சிவபக்தருமான அண்ணாமலை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: 
 இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத நிலை உள்ளது. மேலும், மனுதாரராகிய எனக்கும், எனது மகன்களுக்கும் குற்றவாளிகள் மிரட்டல் விடுத்து வருகின்றனர். 
எனவே, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் ஆதாரங்களை அழித்து, சாட்சிகளைக் கலைத்தும், மிரட்டியும் வருவதால் உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

More from the section

பேருந்துகளை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்
அனுமதியின்றி பேனர்கள் வைத்தால் குற்றவியல் நடவடிக்கை
மகளிர் கல்லூரி ஆண்டு விழா
பிப்.28-இல் சமையல் எரிவாயு வாடிக்கையாளர் முகாம்
அம்மா திட்ட முகாம்