சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

கைப்பந்து போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு

DIN | Published: 19th January 2019 03:29 AM


மதுராந்தகத்தை அடுத்த கருங்குழியில் பொங்கல் பண்டிகையையொட்டி நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான கைப்பந்து, பேட்மின்டன் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.
கருங்குழியில் வியாழக்கிழமை கருங்குழி அப்பு விளையாட்டுக் குழு சார்பில் 23-ஆம் ஆண்டாக இப்போட்டிகள் நடத்தப்பட்டன. மாவட்ட அளவில்  17 விளையாட்டுக் குழுக்கள் கைப்பந்து போட்டியில் பங்கேற்றன.
அதேபோல் 16 குழுக்கள் பேட்மின்டன் விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டது. இரு விளையாட்டுப் போட்டிகளிலும் தலா 3 அணிகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.  மாவட்ட லயன்ஸ் சங்க நிர்வாகிகள் கண்ணன், பார்த்தீபன், வரதராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டு தெரிவித்தனர்.  விளையாட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் சசிக்குமார் தலைமையில் பார்த்தசாரதி, வினோத் உள்ளிட்டோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளைக் கவனித்தனர்.
 

More from the section

பேருந்துகளை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்
அனுமதியின்றி பேனர்கள் வைத்தால் குற்றவியல் நடவடிக்கை
மகளிர் கல்லூரி ஆண்டு விழா
பிப்.28-இல் சமையல் எரிவாயு வாடிக்கையாளர் முகாம்
அம்மா திட்ட முகாம்