வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

திடக்கழிவு மேலாண்மை ஊழியர்கள் 40 பேருக்கு நல உதவிகள்

DIN | Published: 19th January 2019 03:28 AM


புதுப்பட்டினம் ஊராட்சியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை துப்புரவுப் பணியாளர்கள் 40 பேருக்கு புதுப்பட்டினம் வணிகர் சங்கம் சார்பில் வேட்டி, சேலை, ஊக்கத் தொகை ஆகியவை வழங்கப்பட்டன.
தனியார் மண்டபத்தில் வியாழக்கிழமை நடந்த இந்நிகழ்ச்சிக்கு வணிகர் சங்கத் தலைவர் காதர் உசேன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கிங் உசேன், செயலர் சுகுமாரன், துணைச் செயலர் சம்சுகனி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பணியாளர்கள் 40 பேருக்கு வேட்டி, சேலை, ஊக்கத் தொகை ஆகியன வழங்கப்பட்டன. சங்க நிர்வாகிகள் காதர்  பாஷா, ஷரீஃப், நீலகண்டன், ஏழுமலை மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

More from the section

பிஎஸ்என்எல் சேவை முடக்கம்: இணையதள பயனாளிகள் அவதி
குடிநீர் வரி வசூலிக்க முடியாமல் திணறும் நகராட்சி நிர்வாகம்
தொழிற்பயிற்சி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்
டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ. மனு
ரூ.62 லட்சம் மதிப்பிலான புதிய கட்டடங்களுக்கு அடிக்கல்