வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

பச்சையம்மன் கோயிலில் பக்தர்கள் தங்கும் அறைகள்:   ரூ.18 லட்சத்தில் கட்ட அதிகாரிகள் ஆய்வு

DIN | Published: 19th January 2019 03:29 AM


மானாம்பதிக்கு அருகே உள்ள பச்சையம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தங்கும் அறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அக்கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
காஞ்சிபுரத்தை மாவட்டம், உத்தரமேரூர் வட்டம், மானாம்பதிக்கு அருகே பச்சையம்மன், மன்னார்சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில், ஆடி, தை மாதங்களில் சுவாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கானோர் வருகை தருகின்றனர். அதேபோல், வாரம்தோறும் வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் காஞ்சிபுரம், உத்தரமேரூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் இக்கோயிலுக்கு வருகை தருகின்றனர். இங்கு வரும் பக்தர்கள் பொங்கலிடுதல், முடி காணிக்கை செலுத்துதல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுகின்றனர். 
இந்நிலையில், பக்தர்கள் தங்குவதற்கான வசதி இக்கோயில் பகுதியில் இல்லை. போதிய அடிப்படை வசதிகளும் இல்லை. இது குறித்து பக்தர்கள் சார்பில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அதையடுத்து, ரூ.18 லட்சம் செலவில் பக்தர்கள் தங்கும் அறைகளை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஆணையரின் அனுமதிக்கு கோயில் நிர்வாகம் விண்ணப்பம் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து பக்தர்கள் தங்கும் அறைகள் அமையவுள்ள இடத்தில் வேலூர் உதவி கோட்டப் பொறியாளர் மோகனசுபா, கோயில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார் ஆகியோர் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். 

More from the section

பிஎஸ்என்எல் சேவை முடக்கம்: இணையதள பயனாளிகள் அவதி
குடிநீர் வரி வசூலிக்க முடியாமல் திணறும் நகராட்சி நிர்வாகம்
தொழிற்பயிற்சி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்
டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ. மனு
ரூ.62 லட்சம் மதிப்பிலான புதிய கட்டடங்களுக்கு அடிக்கல்