செவ்வாய்க்கிழமை 19 பிப்ரவரி 2019

வேதகிரீஸ்வரர் கோயிலில் நாளை தெப்போற்சவம்

DIN | Published: 19th January 2019 11:43 PM

 திருக்கழுகுன்றம் திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் கோயிலின் சங்குதீர்த்தக் குளத்தில் திங்கள்கிழமை (21ஆம் தேதி) மாலையும், தாழக்கோயில் ரிஷப தீர்த்தக் குளத்தில் செவ்வாய்க்கிழமை (22ஆம் தேதி) மாலையும் தெப்போற்சவம் நடைபெற உள்ளது. 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருக்கழுகுன்றம் திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் கோயில் ருத்திரகோடி பட்சி தீர்த்தம்' என அழைக்கப்படுகிறது. இக்கோயில் குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு பிறப்பதாக ஐதீகம். எனவே இது சங்கு தீர்த்தக்குளம் என்ற பெயரில் வழஙக்கப்படுகிறது. இக்குளத்தில் தைப்பூச நாளான வரும் 21ஆம் தேதி (திங்கள்கிழமை) மாலை 6.30 மணிக்கு தெப்போற்சவம் நடைபெற உள்ளது. அதற்கு மறுநாள் செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிக்கு தாழக்கோயிலில் உள்ள ரிஷப தீர்த்தக் குளத்தில் தெப்பத் திருவிழா, மின் அலங்காரம், வாண வேடிக்கை, விசேஷ மேளக் கச்சேரியுடன் நடைபெறவுள்ளது.
இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் மற்றும் செயல் அலுவலர் எம்.சக்திவேல், செயல் அலுவலர் ஆ.குமரன், கோயில் சிவாச்சாரியார்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

More from the section

21 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம்: ஆட்சியர் வழங்கினார்
குடிநீர் விநியோகம் செய்யக் கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி
காவல் துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
மக்களவைத் தேர்தல்: 52 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்