திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

செய்யாறில் கண்ணாடி இழை கேபிள் வலைப்பின்னல் சேவை தொடக்கம்

DIN | Published: 16th December 2018 12:52 AM


செய்யாறில் பிஎஸ்என்எல் சார்பில், கண்ணாடி இழை கேபிள் வலைப்பின்னல் சேவையை முதன்மைப் பொது மேலாளர் வெங்கட்ராமன் தொடக்கிவைத்தார்.
திருவத்திபுரம் (செய்யாறு) தொலைத் தொடர்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சிக்கு வேலூர் கோட்ட முதன்மை பொது மேலாளர் வெங்கட்ராமன் தலைமை வகித்தார். துணைப் பொது மேலாளர்கள் வேலாயுதம், ஆறுமுகம், கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்டப் பொறியாளர் சாலமன் வரவேற்றார்.
செய்யாறு பகுதியில் கண்ணாடி இழை கேபிள் வலைப்பின்னல் சேவையை தொடக்கிவைத்த முதன்மைப் பொது மேலாளர் வெங்கட்ராமன் பேசியதாவது:
மத்திய அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களுடன் செய்துள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, கேபிள் டிவி ஆபரேட்டர்கள் உதவியுடன் வேலூர் தொலைபேசி கோட்டத்தைச் சேர்ந்த வேலூர், வாணியம்பாடி, திருவண்ணாமலை, காட்பாடி, செய்யாறு, குடியாத்தம், ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் கண்ணாடி இழை கேபிள் வலைப்
பின்னல் சேவை அறிமுகப்படுத்தப்பட்டு, 1,020 பேருக்கு இணைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மேலும் பலர் தாங்களாகவே முன் வந்து கண்ணாடி இழை கேபிள் வலைப்பின்னல் சேவைக்கு பணம் கட்டி வருகின்றனர். வந்தவாசி பகுதியில் இன்னும் ஒரு மாதத்தில் இந்தச் சேவை கிடைக்க உள்ளது.
பிஎஸ்என்எல் தற்போது பணம் திரும்பப்பெறும் புதிய சலுகை தரைவழி தொலைபேசி இணைப்பு, அகண்ட அலைவரிசை (பிராட்பேண்ட்) மற்றும் எம்.டி.டி.எச். சந்தாதாரர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்தத் திட்டம் வரும் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். இதேபோல, புது வசந்தம் திட்டமானது மேலும் மெருகூட்டப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் ரூ.45 செலுத்தி இணைப்பு பெறுபவர்களுக்கு முதல் 15 நாள்கள் அளவற்ற அழைப்புகள் இலவசம்.
அது மட்டுமின்றி 1,000 குறுஞ்செய்திகள், முதல் 15 நாள்களுக்குள் ஒரு ஜி.பி. டேட்டா இலவசம். இதன் வேலிடிட்டி பிப்ரவரி 2020 வரை அமலில் இருக்கும். இதனால், மாதாமாதம் ரீசார்ஜ் செய்து வேலிடிட்டியை புதுப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
நிகழ்ச்சியில் இளநிலை அதிகாரிகள் சுரேஷ், செந்தில்குமார், ஸ்ரீகாந்த், வைபவ்திவாரி, சரிதா, கார்த்திகேயன், கேபிள் டிவி ஆபரேட்டர் மோகன கிருஷ்ணன் மற்றும் பிஎஸ்என்எல் சந்தாதாரர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

More from the section

சாத்தனூர் அணையில் மூழ்கிய மற்றொருவரின் சடலம் மீட்பு: இருவர் கைது


பொதுமக்களுக்கு இலவச அடுப்புடன் சமையல் எரிவாயு அளிப்பு

ஆரணி -ஆற்காடு சாலையில் ரூ.16 கோடியில் மேம்பாலம்: அமைச்சர் தகவல்
வந்தவாசி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்களை நியமிக்கக் கோரிக்கை
எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்