திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

பாரதியார் பிறந்த நாள் விழா சிறப்புக் கவியரங்கம்

DIN | Published: 16th December 2018 12:51 AM


வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கம் சார்பில், பாரதியார் பிறந்த நாள் விழா சிறப்புக் கவியரங்கம் வந்தவாசியில் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் அ.மு.உசேன் தலைமை வகித்தார். சங்க துணைத் தலைவர் சு.அசோக்குமார், துணைச் செயலர் பீ.ரகமத்துல்லா, செயற்குழு உறுப்பினர் பிரேம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கப் பொருளாளர் எ.தேவா வரவேற்றார்.
பாரதி கண்ட பாரதம் என்ற தலைப்பில் ஓய்வு பெற்ற பள்ளித் தலைமை ஆசிரியர் பெ.ஏழுமலை சிறப்புரை ஆற்றினார். சங்க ஆலோசகர் மு.முருகேஷ், செயலர் பா.சீனிவாசன், துணைத் தலைவர் மு.முகமது அப்துல்லா, செயற்குழு உறுப்பினர்கள் ரா.நளினா, வந்தை குமரன் ஆகியோர் கவிதை வாசித்தனர்.
பாரதியார் குறித்த பேச்சுப் போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சங்கச் செயற்குழு உறுப்பினர் கு.சதானந்தன் நன்றி கூறினார்.

 

More from the section

சாத்தனூர் அணையில் மூழ்கிய மற்றொருவரின் சடலம் மீட்பு: இருவர் கைது


பொதுமக்களுக்கு இலவச அடுப்புடன் சமையல் எரிவாயு அளிப்பு

ஆரணி -ஆற்காடு சாலையில் ரூ.16 கோடியில் மேம்பாலம்: அமைச்சர் தகவல்
வந்தவாசி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்களை நியமிக்கக் கோரிக்கை
எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்