செவ்வாய்க்கிழமை 19 மார்ச் 2019

ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

DIN | Published: 12th September 2018 07:03 AM

செங்கம் தமிழ்ச் சங்கம், சிகரம் பன்னாட்டுப் பள்ளி இணைந்து ஆசிரியர்களுக்கு பாராட்டு விழாவை அண்மையில் நடத்தின.
ஆசிரியர் தினத்தையொட்டி, திருவள்ளுவர் நகர் சிகரம் பன்னாட்டுப் பள்ளி வளாகத்தில்  நடைபெற்ற இந்த விழாவுக்கு செங்கம் தமிழ்ச் சங்கத் தலைவர் பேராசிரியர் கு.வணங்காமுடி தலைமை வகித்தார். வழக்குரைஞர் கஜேந்திரன், செங்கம் கல்வி மாவட்ட அலுவலர் கந்தசாமி, வட்டாரக் கல்வி அலுவலர்கள் மகேஸ்வரி, செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ஜெயவேல் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக பேராசிரியர் அப்துல்காதர் கலந்து கொண்டு, ஆசிரியர்களை வாழ்த்திப் பேசினார்.
தொடர்ந்து, ஆசிரியர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் சிறப்பிடம் பெற்ற ஆசிரியர்களுக்கு செங்கம் தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி, பரிசுகளை வழங்கி பாராட்டிப் பேசினார். செங்கம், புதுப்பாளையம், தண்டராம்பட்டு பகுதிகளைச் சேர்ந்த தேர்வு செய்யப்பட்ட சிறந்த ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் பரிசு, சான்றுகளை வழங்கி, ஆசிரியர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துப் பேசினார். விழாவில், தமிழ்ச் சங்க துணைத் தலைவர் கிருஷ்ணன், வட்டாரக் கல்விஅலுவலர்கள் (தண்டராம்பட்டு) பாஸ்கரன், கோவிந்தராஜ், (புதுப்பாளையம்) சிராஜ், ஜான்வின்சென்ட், சிகரம் பள்ளி ஆசிரியர் சந்தோஷ்குமார், செங்கம் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள், ஆசிரியைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளி முதல்வர் ஜாஸ்மின் நன்றி கூறினார்.

More from the section

பேருந்தில் பெண்ணிடம் தங்க நகைகள் திருட்டு
தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் கோயில் தேரோட்டம்: சக்கரத்தில் சிக்கி பெண் சாவு
பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டயம் அளிப்பு விழா
திராவிட இயக்கத் தமிழர் பேரவை கிளை தொடக்கம்
திருக்கல்யாண உத்ஸவம்