வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

சிறுமி பாலியல் வன்கொடுமை: போக்சோ சட்டத்தில்  ஆட்டோ ஓட்டுநர் கைது

DIN | Published: 12th September 2018 07:02 AM

திருவண்ணாமலை மாவட்டம்,  செய்யாறு அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநரை போக்சோ சட்டத்தின் கீழ், போலீஸார் கைது செய்தனர்.
வெம்பாக்கம் வட்டம், பில்லாந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை அதே பகுதியில் வசிக்கும் அவரது உறவினரான ஆட்டோ ஓட்டுநர் வினாயகம் (35) பாலியல் வன்கொடுமை செய்தாராம்.
இதையடுத்து, சிறுமியை மிரட்டி வினாயகம் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்ததால், அவர் கருவுற்றதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து, திருமணம் செய்துகொள்ளுமாறு சிறுமி கேட்டபோது, அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் சண்முகம் கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி புகார் அளித்தார். அதன்பேரில், காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, வினாயகத்தை திங்கள்கிழமை கைது செய்தார்.
 

More from the section

ஆட்சியர் அலுவலகத்தில் சகோதரிகள் தீக்குளிக்க முயற்சி
வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி
மூதாட்டி தற்கொலை
தொழிலாளி தற்கொலை
பள்ளியில் முப்பெரும் விழா