24 பிப்ரவரி 2019

செப்டம்பர் 14-இல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

DIN | Published: 12th September 2018 07:04 AM

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 14) நடைபெறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், படித்த, வேலையில்லாத இளைஞர்கள், பெண்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, அவ்வப்போது தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
அதன்படி, வரும் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 14) தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. முகாமில், 8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள், ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் கல்வித் தகுதியுடையவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
முகாமில் கலந்துகொள்ள வரும்போது, 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், குடும்ப அட்டை, சாதிச்சான்று, கல்வித் தகுதிச் சான்றிதழ்களின் நகலுடன் வர வேண்டும். தனியார் துறை வேலைவாய்ப்புக்கு தேர்வு செய்யப்படுவோரின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.
எனவே, தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் 14-ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார்.
 

More from the section

அதிமுகவில் பாமக இணைந்ததால் பாஜக அதிருப்தி: தொல்.திருமாவளவன்
திருமுறை விழா தொடக்கம்
துணை ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி
ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: திமுக கூட்டத்தில் தீர்மானம்