புதன்கிழமை 20 பிப்ரவரி 2019

பாரதியார் நினைவு தினம் கடைப்பிடிப்பு

DIN | Published: 12th September 2018 07:03 AM

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மகாகவி பாரதியார் நினைவு தினம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட மகாகவி பாரதியார்  தமிழ்ச் சங்கம் சார்பில், பாரதியாரின் 97-ஆவது நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. திருவண்ணாமலை, காந்தி சிலை எதிரே நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பாரதியார் தமிழ்ச் சங்க நிறுவனர் தலைவர் பா.இந்திரராஜன் தலைமை வகித்தார்.
சங்கப் பொதுச் செயலர் ந.சண்முகம் வரவேற்றார். பாரதியார் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது. வேங்கிக்கால் வாசகர் வட்டத் தலைவர் திருக்குறள் சா.சுப்பிரமணியன் எழுதிய ஒளவையார் நீதி நூலை ஆய்வறிஞர் பி.கோ.கோவிந்தராசனார் வெளியிட்டார்.
இதன் முதல் பிரதியை பா.இந்திரராஜன் பெற்றுக்கொண்டார். அருண வித்யா கலைக் கல்லூரிச் செயலர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, கவிஞர் லதா பிரபுலிங்கம், நல்லாசிரியர் மு.சீனுவாசவரதன், ஆசிரியர்கள் பலராமன், வைத்தியலிங்கம், சி.பாலசுப்பிரமணியன், ஓவியர் சோ.ஏ. நாகராஜன், சங்கப் புரவலர் ஆர்.வெங்கடேசபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போளூர்: இதேபோல, போளூரை அடுத்த பூங்கொல்லைமேடு அரசு ஆரம்பப் பள்ளியில் பாரதியார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.  நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் டேவிட்ராஜன் தலைமை வகித்தார். உதவி ஆசிரியை லீலாராணி, ஜாகீர் உசேன், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

More from the section

ஆட்சியர் அலுவலகத்தில் சகோதரிகள் தீக்குளிக்க முயற்சி
வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி
மூதாட்டி தற்கொலை
தொழிலாளி தற்கொலை
பள்ளியில் முப்பெரும் விழா