சனிக்கிழமை 19 ஜனவரி 2019

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி

DIN | Published: 12th September 2018 07:04 AM

செங்கம், புதுப்பாளையம் பேரூராட்சிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புதுப்பாளையம் பேரூராட்சியில் நடைபெற்ற பேரணியை புதுப்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் சுகந்தி கொடியசைத்து தொடக்கிவைத்தார். 
இதில், புதுப்பாளையம் அரசுப் பள்ளி மாணவர்கள், பேரூராட்சிப் பணியாளர்கள் கலந்துகொண்டு பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து முழக்கங்களை எழுப்பியவாறு முக்கிய வீதிகள் வழியாகச் சென்றனர்.
இதேபோல, செங்கம் பேரூராட்சியில் நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியில் செங்கம் மேல்பாளையம் அரசுப் பள்ளி மாணவர்கள், ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து முக்கிய வீதிகள் வழியாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், பேரூராட்சிப் பணியாளர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
 

More from the section

27 நட்சத்திரக் கோயிலில் 108 கோ பூஜை
பயிர்க் காப்பீட்டுத் திட்டம்: விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
காணும் பொங்கல்: சுற்றுலாத் தலங்களில் குவிந்த மக்கள்
கரும்பு வியாபாரியை தாக்கியவர் கைது


திருக்குறள் தொண்டு மையம்  சார்பில் பொங்கல் விழா