செவ்வாய்க்கிழமை 19 பிப்ரவரி 2019

யானைக்கால் நோய் கண்டறியும் முகாம்

DIN | Published: 12th September 2018 07:05 AM

வெம்பாக்கம், போளூர் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் யானைக்கால் நோய் கண்டறிதல், சிகிச்சை அளிக்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
யானைக்கால் நோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ், வெம்பாக்கம் வட்டம், சித்தாத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சித்தாத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் இந்த முகாம் நடத்தப்பட்டது. இதில், வட்டார மருத்துவ அலுவலர் வி.என்.பத்மபிரியா தலைமையில், மருத்துவர்கள் பவித்ரா, சித்ரா, செவிலியர்கள் ஹோமலதா, கனிலட்சுமி, ஷீலா, ஆய்வக நுட்புனர் கனிமொழி ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் 1, 2-ஆம் வகுப்பு படிக்கும் 43 மாணவ, மாணவிகளுக்கு யானைக்கால் நோய் கண்டறிதல் பரிசோதனை மேற்கொண்டனர். ஏற்பாடுகளை பள்ளித் தலைமை ஆசிரியர் அ.மாரியம்மாள், சுகாதார ஆய்வாளர்கள் கே.சம்பத், சுந்தர், சத்தியநாதன், ஆசிரியர் ஏழுமலை ஆகியோர் செய்திருந்தனர்.
போளூர்: போளூரை அடுத்த எழுவாம்பாடி அரசு நடுநிலைப் பள்ளி, மேற்குகொல்லைமேடு அரசு தொடக்கப் பள்ளி ஆகியவற்றில் யானைக்கால் நோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.
இதில், திருசூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கீதா தலைமையிலான மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டு, 1, 2-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் 59 பேருக்கு யானைக்கால் நோய் கண்டறிதல் பரிசோதனை மேற்கொண்டார்.
சுகாதார ஆய்வாளர் நேருராமகிருஷ்ணன், செவிலியர் ஆதிலட்சுமி மற்றும்  மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

More from the section

பள்ளி ஆண்டு விழா
ஏலகிரி, காஞ்சனகிரி மலைகளில் தீ விபத்து
கணவன் கொலை: துக்கத்தில் பெண் தற்கொலை
பள்ளியில் அறிவியல் கண்காட்சி
"ஒரு துளி நீரில் அதிக பயிர்' திட்டம்: திருவண்ணாமலை மாவட்டத்துக்கு ரூ.2.39 கோடி ஒதுக்கீடு