புதன்கிழமை 16 ஜனவரி 2019

ரூ.8.20 லட்சத்திலான வளர்ச்சித் திட்டப் பணிகள் நிறைவு

DIN | Published: 12th September 2018 07:03 AM

கீழ்பென்னாத்தூர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிறைவேற்றப்பட்ட ரூ.8.20 லட்சத்திலான பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கடைப்பிடிகப்பட்டது.
கீழ்பென்னாத்தூர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், வெறையூரை அடுத்த பனையூர் ஊராட்சியில் ரூ.3.20 லட்சத்தில் சிறுமின் விசைப் பம்பு, சு.நல்லூர் ஊராட்சி ஏரிகோடி பகுதியில் ரூ.2.50 லட்சத்தில் சிறுபாலம், தி.வலசை ஊராட்சி திருவாணைமுகம் கிராமத்தில் ரூ.2.50 லட்சத்தில் சிமென்ட் சாலை உள்பட ரூ.8.20 லட்சம் மதிப்பிலான பணிகள் நிறைவேற்றப்பட்டன.
நிறைவடைந்த வளர்ச்சித் திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தொகுதி எம்எல்ஏ கு.பிச்சாண்டி செவ்வாய்க்கிழமை அர்ப்பணித்தார். இதற்கான நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலர் சி.மாரிமுத்து, மாவட்டப் பிரதிநிதி வு.பழனி, ஊராட்சிச் செயலர் பிச்சாண்டி உள்பட பலர் கலந்து 
கொண்டனர்.
 

More from the section

பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் 44 பேருக்கு பணி நியமன ஆணை
200 இலவச வேட்டிகளுடன் பிடிபட்டவர் வருவாய்த் துறையினரிடம் ஒப்படைப்பு
முன்விரோதத் தகராறு: ஒருவர் கைது
போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு
மாமனார் அடித்துக் கொலை: மருமகன் கைது