புதன்கிழமை 16 ஜனவரி 2019

விளையாட்டுப் போட்டிகள்: இந்தோ அமெரிக்கன் பள்ளி சிறப்பிடம்

DIN | Published: 12th September 2018 07:02 AM

செய்யாறு கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டு, தடகள போட்டிகளில் செய்யாறு இந்தோ அமெரிக்கன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.
செய்யாறு கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டு, தடகளப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றது. இதில், செய்யாறு இந்தோ அமெரிக்கன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில், தடகள போட்டிகளில் 14 வயதுக்கு உள்பட்டோருக்கான  பிரிவில் வட்டு எறிதலில் வீ.இமயவரம்பன் இரண்டாமிடமும், மாணவிகள் பிரிவில் ரா.ஸ்ரீவர்ஷினி முதலிடமும், குண்டு எறிதலில் தி.ஓவியா இரண்டாமிடமும் பெற்றனர்.
17 வயதுக்கு உள்பட்ட மாணவிகள் பிரிவில் மோ.பிரியதர்ஷினி வட்டு எறிதலில் மூன்றாமிடமும், குண்டு எறிதலில் இரண்டாமிடமும், பெ.ஜீவிதா 800 மீ ஓட்டப் பந்தயத்தில் இரண்டாமிடமும், ஜெ.வெ.பிரியதர்ஷினி 100 மீ, 200 மீ, நீளம் தாண்டுதல் போட்டிகளில் முதலிடமும், மும்முறை தாண்டும் போட்டியில் இரண்டாமிடமும், இதே பிரிவில் நடைபெற்ற 4 ல 100 மீ தொடர் ஓட்டப் பந்தயத்தில் பெ.ஜீவிதா, பா.பூஜா, சே.ஹேமச்சந்திரா, ஜெ.வெ.பிரியதர்ஷினி ஆகியோர் முதலிடமும் பெற்றனர். 19 வயதுக்கு உள்பட்ட மாணவர்கள் பிரிவில் மு.கார்த்திக்ராஜா 400 மீ ஓட்டப்பந்தயத்தில் முதலிடமும், கு.சாய்தருண் வட்டு, குண்டு எறிதலில் முதலிடமும் பெற்றனர். மாணவிகள் பிரிவில் மு.சுவாதி 100 மீ, 200 மீ, மும்முறை தாண்டுதல் போட்டிகளில் முதலிடமும், வெ.சொர்ணலட்சுமி மும்முறை தாண்டுதலில் இரண்டாமிடமும், த.கீர்த்தனா வட்டு எறிதலில் முதலிடமும், கு.ஹேமப்பிரியா குண்டு எறிதலில் இரண்டாமிடமும், இதே பிரிவில் நடைபெற்ற 4 ல 100 மீ ஓட்டத்தில் வெ.சொர்ணலட்சுமி, மை.பூமிகா, ம.சுபஸ்ரீ, மு.சுவாதி ஆகியோர் மூன்றாமிடமும் பெற்றனர்.
செய்யாறு கல்வி மாவட்ட அளவில் நடைபெற்ற மகளிர் தடகள போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டமும், பதினேழு வயதுப் பிரிவில் ஜெ.வெ. பிரியதர்ஷினி, பத்தொன்பது வயது பிரிவில் மு.சுவாதி ஆகியோர் தனி நபர் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்று சாதனை படைத்தனர்.
இதேபோல, செஸ், கால்பந்து போட்டிகளும் மாணவர்கள் சாதனை படைத்தனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடல் பயிற்சி ஆசிரியர்கள் ச.மோகன், சீ.ராதிகா, சு.அருண்குமார் ஆகியோரையும் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளர் அ.ராதாகிருஷ்ணன், முதல்வர் அ.பா. சையது அப்துல் இலியாஸ், துணை முதல்வர் க.கோவேந்தன் ஆகியோர் பாராட்டி ஊக்கப் பரிசு வழங்கினர்.
 

More from the section

பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் 44 பேருக்கு பணி நியமன ஆணை
200 இலவச வேட்டிகளுடன் பிடிபட்டவர் வருவாய்த் துறையினரிடம் ஒப்படைப்பு
முன்விரோதத் தகராறு: ஒருவர் கைது
போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு
மாமனார் அடித்துக் கொலை: மருமகன் கைது