புதன்கிழமை 20 பிப்ரவரி 2019

அரசுப் பேருந்து மரத்தில் மோதல்: 13 பேர் காயம்

DIN | Published: 12th September 2018 01:12 AM

திருப்பத்தூர் அருகே அரசுப் பேருந்து மரத்தில் மோதியதில் 13 பயணிகள் காயமடைந்தனர்.
கிருஷ்ணகிரியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று செவ்வாய்க்கிழமை வந்து கொண்டிருந்தது. கந்திலி அருகே தாதங்குட்டை பகுதியில் வந்தபோது, முன்னால் பைக்கில் சென்றவர்கள் திடீரென திரும்பியதால், பைக் மீது பேருந்து மோதாமலிருக்க அதன் ஓட்டுநர் பிரேக் பிடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதியது. 
இதில், ஒடுகத்தூரைச் சேர்ந்த ஓட்டுநர் பாலாஜி, நடத்துநர் ராமலிங்கம், பயணிகள் வெங்கடாசலம், சாந்தி உள்ளிட்ட 13 பேர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 
இதுகுறித்து கந்திலி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

More from the section

முதல்வர் கோப்பைக்கான பளுதூக்கும் போட்டி: வேலூர் மாவட்ட அணி சாம்பியன்
ஜோலார்பேட்டை அருகே அரிய வகை ஆந்தை மீட்பு
அரசுப் பள்ளிக்கு கல்விச் சீர்
அரசுக் கல்லூரியில் ரூ.1.55 கோடியில் கட்டப்பட்ட வகுப்பறைகள் திறப்பு
வீரமரணமடைந்த வீரர்களுக்கு அஞ்சலி