வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

ரயில் மோதி இளைஞர் சாவு

DIN | Published: 19th November 2018 04:31 AM


பொள்ளாச்சி ரயில் நிலையம் அருகே ரயில் மோதி இளைஞர் உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி ரயில் நிலையம், இரட்டை கண் பாலம் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை தண்டவாளத்தில் இளைஞர் ஒருவர் இறந்துகிடப்பதாக பொள்ளாச்சி ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்குச் சென்ற ரயில்வே போலீஸார் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு உடற் கூராய்வுக்கு அனுப்பிவைத்தனர்.
விசாரணையில், உயிரிழந்தவர் பொள்ளாச்சி, கண்ணப்பன் நகரைச் சேர்ந்த இரும்புப் பட்டறைத் தொழிலாளி பட்டத்தரசன்(24) என்பது தெரியவந்தது. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் தண்டவாளத்தை கடந்து செல்லும்போது அந்த வழியாக வந்த சரக்கு ரயில் மோதி பட்டத்தரசன் இறந்திருக்கலாம் அல்லது தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்றும் ரயில்வே போலீஸார் தெரிவித்தனர்.

 

More from the section

தேர்தல் பறக்கும்படையினர் சோதனை: காரில் கொண்டு வந்த
 ரூ.7.21 லட்சம் பறிமுதல்


பொள்ளாச்சி வழக்கில் சி.பி.சி.ஐ.டி. சம்மன்: காங்கிரஸ் செயல் தலைவர் ஆஜர்


மேட்டுப்பாளையத்தில் ரூ.1.20 லட்சம் பறிமுதல்

கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன்
ஆட்சியர் முகாம் அலுவலக குடியிருப்பில் தொழிலாளி மகன் தற்கொலை