வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

காமாட்சிபுரத்தில் 30 பேருக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கல்

DIN | Published: 12th September 2018 06:38 AM

சூலூரை அடுத்த காமாட்சிபுரத்தில் மத்திய அரசின் உஜ்வலா திட்டத்தில் இலவச எரிவாயு இணைப்பு மற்றும் உபகரணங்கள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. 
விழாவுக்கு பாஜக இருகூர் மண்டலத் தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞர் அணி துணைத் தலைவர் இ.க.சிதம்பரம் வரவேற்றார். பாஜக கோவை வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் சத்தியமூர்த்தி எரிவாயு உருளை, அடுப்பு மற்றும் உபகரணங்களை வழங்கி மத்திய அரசின் திட்டங்களை எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் இரண்டாவது தவணையாக 30 பேருக்கு இலவச எரிவாயு உருளை, அடுப்புகள்  வழங்கப்பட்டன.  மாவட்ட வழக்குரைஞர் அணியைச் சேர்ந்த விஜயகுமார், இளைஞரணி வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹரிஹரன் நன்றி கூறினார்.
 

More from the section

கோவை அரசு மருத்துவமனையில் ரத்தம் செலுத்தப்பட்ட சிறுமிக்கு எச்ஐவி பாதிப்பு: பெற்றோர் புகார்; மருத்துவமனை மறுப்பு
காதல் திருமணம் செய்த இளைஞரை காரில் கடத்திய கும்பல்
உயிரிழந்த வீரர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம்: மாதா அமிர்தானந்தமயி மடம் அறிவிப்பு
காரமடை தேர்த் திருவிழா: பிப்ரவரி 19, 20 வரை 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் சார்பில் விவாஹ மாலை டாட் காம் நாடகம்