திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

டெங்கு காய்ச்சல் பாதிப்பு:  கோவையில் மூவருக்கு சிகிச்சை

DIN | Published: 12th September 2018 06:41 AM

டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூவர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தென்மேற்கு பருவ மழை தொடங்கிய நிலையில் கோவை மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்தது. அன்னூர் வட்டம், அல்லிகாரன்பாளையத்தைச் சேர்ந்த கலைவாணி (52), கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த பாலசந்திரன் (23) ஆகியோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 
இந்நிலையில் தற்போது கோவையைச் சேர்ந்த மூன்று பேர், திருப்பூரைச் சேர்ந்த ஒருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பொன்னையா என்பவரும் சிகிச்சை பெற்று  வருகிறார்.
 

More from the section

தொண்டாமுத்தூரில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிய துணை மின்நிலையம் திறப்பு
மாநகராட்சி வரி வசூல் மையங்கள் சனி, ஞாயிறுதோறும் செயல்படும்:ஆணையர் அறிவிப்பு
கிணத்துக்கடவில் எம்ஜிஆர் பிறந்த நாள் பொதுக் கூட்டம்
ஸ்ரீ விநாயகா வித்யாலயா பள்ளியில் ஓவியத் திருவிழா: மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
திருமணம் ஆன 2 மாதங்களில் பட்டதாரிப் பெண் தற்கொலை