21 ஏப்ரல் 2019

இரு சக்கர வாகனம் மோதி முதியவர் சாவு

DIN | Published: 20th March 2019 08:03 AM

சூலூர் அருகே இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்தார்.
சூலூர் அருகே சுப்பராம்பாளையத்தைச் சேர்ந்தவர் நஞ்சப்பன் மகன் தங்கவேல் (55). இவர் முதலிபாளையத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் கூலி வேலை செய்துவந்தார். சுப்பராம்பாளையத்திலிருந்து தென்னம்பாளையம் சாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை வேலைக்குச் சென்றுகொண்டிருந்தார். 
அப்போது தென்னம்பாளையம் அருகே சாலையின் வலது புறம் திரும்பியபோது எதிர் திசையில் வேகமாக வந்த இரு சக்கர வாகனம் இவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.இதுகுறித்து சூலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

More from the section

புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்: அண்ணா பல்கலை. துணைவேந்தர் எம்.கே.சூரப்பா பேச்சு


பேராசிரியர் வீட்டில் நகை, பணம் திருட்டு

மருதூர் ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
கோவையை குளிர்வித்த கோடை மழை
பாலமலை ரங்கநாதர் கோயில் சித்திரைத் தேர்த் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்