புதன்கிழமை 24 ஏப்ரல் 2019

தேர்தல் விழிப்புணர்வுப் பேரணி

DIN | Published: 20th March 2019 08:04 AM

கோவையில் மாநகராட்சி சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி செவ்வாக்கிழமை விழிப்புணர்வுப் பேரணி நடந்தது. 
கோவை (தெற்கு) சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட மாநகராட்சி பகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. இதில் ரத்தினம் கல்லூரியைச் சேர்ந்த 200 மாணவர்கள் பங்கேற்று 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் பதாகைகளை ஏந்திச் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். செட்டி வீதியில் தொடங்கிய பேரணி பாலாஜி நகர், சாவித்திரி நகர் வழியாக பேரூர் செல்வபுரம் சாலையில் நிறைவடைந்தது. இதில் தெற்கு மண்டல உதவி ஆணையர் டி.ஆர்.ரவி, மண்டல சுகாதார ஆய்வாளர் லோகநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

More from the section

குடிநீர் வழங்காததைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
அன்னூர் கிளை நூலகத்தில் உலக புத்தக தினம்
வடமாநில தொழிலாளி கொலை: இளைஞர் கைது
அன்னூர் மாரியம்மன் கோயிலில் பூச்சாட்டுத் திருவிழா
சார்பு ஆய்வாளரைத் தாக்கிய இளைஞர் கைது