புதன்கிழமை 24 ஏப்ரல் 2019

வெளிநாட்டு கெளுத்தி மீன்களுக்குத் தடை: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

DIN | Published: 20th March 2019 08:04 AM

கோவை மாவட்டத்தில் மத்திய, மாநில அரசால் தடை செய்யப்பட்டுள்ள வெளிநாட்டு கெளுத்தி மீன்கள் உற்பத்தி மற்றும் வளர்ப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.  
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
தேசிய பசுமை ஆணைய தீர்ப்பாயத்தின்படி மத்திய, மாநில அரசால் தடைசெய்யப்பட்டுள்ள வெளிநாட்டு கெளுத்தி மீன்களை கோவை மாவட்டத்தில் உற்பத்தி மற்றும் வளர்ப்பது தடை செய்யப்பட்டுள்ளது. தடையை மீறி வெளிநாட்டு கெளுத்தி மீன்கள் உற்பத்தி மற்றும் வளர்ப்பில் ஈடுபடுபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்புடைய மீன் வளர்ப்பு குளங்கள், மீன்கள் முற்றிலும் அகற்றப்படும். மேலும், மீன்பண்ணைகளில் கட்லா, ரோகு, மிர்கால், சாதா கெண்டை, புல்கெண்டை, வெள்ளிக்கெண்டை மற்றும் கண்ணாடிக் கெண்டை மீன்கள் போன்ற அரசால் அனுமதிக்கப்பட்டு உள்ள மீன்கள் வளர்த்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from the section

குடிநீர் வழங்காததைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
அன்னூர் கிளை நூலகத்தில் உலக புத்தக தினம்
வடமாநில தொழிலாளி கொலை: இளைஞர் கைது
அன்னூர் மாரியம்மன் கோயிலில் பூச்சாட்டுத் திருவிழா
சார்பு ஆய்வாளரைத் தாக்கிய இளைஞர் கைது