24 பிப்ரவரி 2019

மாணவர்களுக்கான சிறப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

DIN | Published: 12th September 2018 07:09 AM

கோபி சாரதா கல்வி நிறுவனங்களின் சார்பில், மாணவர்களுக்கான சிறப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
 இந்நிகழ்ச்சிக்கு, சாரதா இண்டர்நேஷனல் பள்ளித் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். தாளாளர் பெருமாள்சாமி முன்னிலை வகித்தார். பள்ளிச் செயலர் சீதாலட்சுமி வரவேற்றார்.
 சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மேற்கு மண்டல காவல் துறை ஐ.ஜி. அ.பாரி பேசியதாவது:
 மாணவர்கள் எதையும் கற்றுக்கொள்ளும் முன்னர்அதன் வரலாற்றுப் பின்னணியைத் தெரிந்துகொள்ள வேண்டும். எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக் கொண்டு அறிவை வளர்த்துக் கொள்ளலாம். ஆனால், தமிழறிவை செழுமைப்படுத்திக் கொள்வதன் மூலம் மட்டுமே நாவன்மையும், ஆளுமையையும் ஒரு மாணவரால் பெற முடியும் என்றார்.   இதில், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பொற்றோர் கலந்துகொண்டனர்.

More from the section

கோபி நகராட்சியில் ரூ.56.43 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப் பணிகள்
ஈரோடு மாவட்ட வனப் பகுதிகளில் மார்ச் 31 வரை மலையேற்றப் பயிற்சிக்குத் தடை
குமுதா பள்ளி மாணவ, மாணவியருக்கு பாராட்டு
சாலையோரங்களில் விளம்பரத் தட்டிகள் வைத்தால் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை
பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் விளையாட்டு விழா