சனிக்கிழமை 23 மார்ச் 2019

ஈரோடு மாவட்டத்தில் 21 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

DIN | Published: 18th February 2019 09:02 AM

மக்களவை தேர்தலையொட்டி ஈரோடு மாவட்டத்தில் 21 காவல் ஆய்வாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 
 மக்களவைத் தேர்தல் அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலையொட்டி மேற்கு மண்டலத்துக்கு உள்பட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் 98 காவல் ஆய்வாளர்களை பணியிடம் மாற்றம் செய்து, மேற்கு மண்டல காவல் துறை தலைவர் கே.பெரியய்யா உத்தரவிட்டுள்ளார்.
இதில் ஈரோடு மாவட்டத்தில் 21 காவல் ஆய்வாளர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.  ஈரோடு டவுன் குற்றப் பிரிவு ஆய்வாளர் மணிவண்ணன், கோவை வடவள்ளிக்கும், நீலகிரி மாவட்டம், நடுவட்டம் ஆய்வாளர் சுந்தரேசன் ஈரோடு டவுன் குற்றப் பிரிவுக்கும், ஈரோடு டவுன் சட்டம்-ஒழுங்கு ஆய்வாளர் விஜயன், கோபி மதுவிலக்கு பிரிவுக்கும்,  அங்கு பணியாற்றிய ஆய்வாளர் நர்மதா தேவி திருப்பூர் மாவட்டம், தாராபுரம் குற்றப் பிரிவுக்கும், பவானி காவல் நிலைய ஆய்வாளர் இளங்கோ திருப்பூர் மாவட்டம், அவிநாசிக்கும் அங்கு பணியாற்றிய தேவேந்திரன் பவானி காவல் நிலையத்துக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 21 காவல்ஆய்வாளர்கள் தவிர ஈரோடு மாவட்டத்தில் மதுவிலக்கு போலீஸார் உள்பட 72 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
 

More from the section

கொங்கு பாலிடெக்னிக் மாணவர்களுக்கு பணி ஆணை வழங்கும் விழா
பெருந்துறையில் ரூ. 45 லட்சம் பறிமுதல்
தாளவாடியில் முட்டைகோஸ் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
தமிழக அணிக்கு பெருந்துறை விவேகானந்தா பள்ளி மாணவர்கள் தேர்வு
பெருமாநல்லூர் அருகே ரூ.72 ஆயிரம் பறிமுதல்