24 மார்ச் 2019

சாலை விபத்தில் பெண் சாவு

DIN | Published: 18th February 2019 09:03 AM

பெருந்துறை அருகே, இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தார். 
திருப்பூர் மாவட்டம்,  அவிநாசியை அடுத்த, கவுண்டன்பாளையம் புதுஊஞ்சப்பாளையத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி சுதா (20). இவர்கள், பெருந்துறை சிப்காட் அருகே, இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தனர். 
அப்போது, அந்த வழியாக வந்த லாரி,  இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே சுதா உயிரிழந்தார். இதுகுறித்து, பெருந்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

More from the section

ஈரோடு மக்களவைத் தொகுதி: 13 நாள்களில் ரூ.40 லட்சம் பறிமுதல்
கொங்கு வேளாளர் பாலிடெக்னிக் கல்லூரியில் யமஹா பயிற்சிப் பள்ளி துவக்கம்
பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரியில் சாதனையாளர் விருது வழங்கும் விழா
பெருந்துறையில் ரூ.1.65 கோடிக்கு கொப்பரை ஏலம்
8 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு 8,050 வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு