வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

சென்னையில் சுதா மருத்துவமனை திறப்பு

DIN | Published: 18th February 2019 09:02 AM

சென்னை, புரசைவாக்கத்தில் பழைய தாஸ் பிரகாஷ் ஹோட்டல் எதிரில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுதா மருத்துவமனை மகளிர் கருத்தரித்தல் மையம் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
  விழாவில் சுதா மருத்துவமனைகளின் தலைவர் டி.கந்தசாமி, நிர்வாக இயக்குநர் சுதாகர் ஆகியோர் வரவேற்றனர். நிர்வாக இயக்குநர் எஸ்.எஸ்.பிரதீபா குத்துவிளக்கேற்றினார். சீனியர் ஆடிட்டர் என்.பழனிவேலு, முன்னாள் எம்.பி. பாலகங்கா, மூத்த வழக்குரைஞர் காந்தி,  முன்னாள் நீதிபதி ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  
  புதிய மருத்துவமனையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்துவைத்தார். சுதா மருத்துவமனை கருத்தரிப்பு மற்றும் மகளிர் நல மைய இயக்குநர் தனபாக்கியம் பேசுகையில், ஈரோடு உள்ளிட்ட எங்கள் மருத்துவமனைகளில் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகளை சோதனைக்குழாய் முறையில் பிரசவித்துள்ளோம். 40,000-க்கும் மேற்பட்ட தம்பதிகள் ஐயுஐ  முறையில் பயன் பெற்றுள்ளனர் என்றார்.

More from the section


கனி மார்க்கெட் வியாபாரிகள் அனைவருக்கும் புதிய வணிக வளாகத்தில் கடை ஒதுக்கப்படும்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

சித்த மருத்துவரிடம் ரூ.1 லட்சம் பறிமுதல்
மத்திய பாஜக ஆட்சியில் விவசாயம், தொழில் துறைகள் பாதிப்பு: கம்யூனிஸ்ட் வேட்பாளர் கே.சுப்பராயன்


பூதப்பாடியில் ரூ.10 லட்சத்துக்கு வேளாண் விளைபொருள்கள் ஏலம்

கோபியில் ரூ.3 லட்சம் பறிமுதல்