திங்கள்கிழமை 25 மார்ச் 2019

பன்னிரு திருமுறை முற்றோதல்

DIN | Published: 18th February 2019 09:00 AM

திருமுறை திருக்காவனம் சிவனடியார் திருக்கூட்டம், திருமுறை சேவை மையம் சார்பில் ஞாலம் அளந்த பன்னிரு திருமுறை முற்றோதல் இன்னிசைப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
 விழாவில் அரிகர தேசிக சுவாமிகள் சொற்பொழிவாற்றினார். சிவனடியார்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஓதுவார் மூர்த்திகளும் விழாவில் பங்கேற்று 63 நாயன்மார்களில் முதன்மையான நால்வர்களான, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் பாடிய பன்னிரு திருமுறை பாடல்களைப் பாடி அதற்கான விளக்கம் அளித்தனர். மாதம் ஒரு முறை நடக்கும் இந்த ஆன்மிக நிகழ்வில் ஈரோடு மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சிவனடியார்கள், சிவ பக்தர்கள், பொதுமக்கள்  கலந்து கொண்டனர்.            

More from the section

ஈரோடு மக்களவைத் தொகுதி: 13 நாள்களில் ரூ.40 லட்சம் பறிமுதல்
கொங்கு வேளாளர் பாலிடெக்னிக் கல்லூரியில் யமஹா பயிற்சிப் பள்ளி துவக்கம்
பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரியில் சாதனையாளர் விருது வழங்கும் விழா
பெருந்துறையில் ரூ.1.65 கோடிக்கு கொப்பரை ஏலம்
8 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு 8,050 வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு