திங்கள்கிழமை 25 மார்ச் 2019

வளர்ச்சிப் பணிகள்: குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஆய்வு

DIN | Published: 18th February 2019 09:01 AM

பெருந்துறைத் தொகுயில் நடைபெற்று வரும் கொடிவேரிக் கூட்டுக் குடிநீர்த் திட்டம் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை  தமிழ்நாடு அரசு குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண்மை இயக்குநர் ஆனந்த் சனிக்கிழமை ஆய்வு செய்தார். 
பெருந்துறை பயணியர் விடுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழக சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழு தலைவரும், பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினருமாகிய தோப்பு என்.டி.வெங்கடாச்சலம்,  தமிழ்நாடு அரசு குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண்மை இயக்குநர் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டு திட்டங்கள் பற்றி ஆய்வு செய்தனர். 
இதில்,  பெருந்துறை ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள்,  பேரூராட்சியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டம்  உள்ளிட்ட பணிகளும் ஆய்வு செய்யப்பட்டன. இணை மேலாண்மை இயக்குநரிடம், திட்டப் பணிகளை துரிதமாக முடிக்க எம்.எல்.ஏ. கேட்டுக் கொண்டார். 
மேலும், பாதாள சாக்கடைத் திட்டத்தில் விடுப்பட்ட பகுதிகளைச் சேர்க்க கேட்டு மனு ஒன்றை அளித்தார். 
தமிழ்நாடு அரசு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், பெருந்துறை ஒன்றிய செயலாளர் விஜயன், பெருந்துறை ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் எஸ்.பெரியசாமி, பெருந்துறை வேளாண் கூட்டுறவு விற்பனை சங்க துணைத் தலைவர் டி.டி.ஜெகதீஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்

More from the section

ஈரோடு மக்களவைத் தொகுதி: 13 நாள்களில் ரூ.40 லட்சம் பறிமுதல்
கொங்கு வேளாளர் பாலிடெக்னிக் கல்லூரியில் யமஹா பயிற்சிப் பள்ளி துவக்கம்
பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரியில் சாதனையாளர் விருது வழங்கும் விழா
பெருந்துறையில் ரூ.1.65 கோடிக்கு கொப்பரை ஏலம்
8 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு 8,050 வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு