புதன்கிழமை 20 மார்ச் 2019

ஏகாம்பரநாதர் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

DIN | Published: 19th February 2019 07:52 AM

சிவகிரி அருகேயுள்ள தாண்டாம்பாளையத்தில் காமாட்சியம்மன் உடனமர் ஏகாம்பரநாதர் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.
திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு விநாயகர் வழிபாடும், அதனைத் தொடர்ந்து மகாகணபதி யாகம், காமாட்சியம்மன் ஏகாம்பரேஸ்வர யாகம், லட்சுமி சுதர்சன யாகம், கோ பூஜை முதலியவை நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, காலை 7 மணிக்கு விநாயகர், சிவகாமி, நடராஜர் உற்சவமூர்த்திகளுக்கு பலவிதமான நறுமணப் பொருள்களால் மகா அபிஷேகம் ஆகியவை நடைபெற்று காலை 10 மணிக்குத் திருக்கல்யாண வைபவமும், தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றன. 
கல்யாண  உற்சவ ஏற்பாடுகளை ஆலய பரிபாலன சபையினர், செங்குந்த சமூகத்தினர்  செய்திருந்தனர்.

More from the section

மார்ச் 20 மின்தடை 
பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்ச் 21 இல் பங்குனி உத்திரத் தேர்த் திருவிழா


சென்னிமலை நஞ்சுண்டேசுவரர் கோயிலில் பங்குனி மாத சிறப்பு வழிபாடு

வேட்பு மனு தாக்கல் இன்று துவக்கம்: ஆட்சியர், கோட்டாட்சியர் 
அலுவலகங்களில் மனு அளிக்கலாம்

ஈரோடு மக்களவைத் தொகுதி  அதிமுக வேட்பாளர்