திங்கள்கிழமை 25 மார்ச் 2019

காற்று ஒலிப்பான் பயன்படுத்திய தனியார் பேருந்துகளுக்கு அபராதம்

DIN | Published: 19th February 2019 07:51 AM

காற்று ஒலிப்பான்களைப்  பயன்படுத்திய தனியார் பேருந்துகளுக்கு போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்தனர்.
ஈரோடு வடக்கு போக்குவரத்து போலீஸார் திங்கள்கிழமை மாலை ஸ்வஸ்திக் கார்னர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, சேலம் மாவட்டம், கொளத்தூரில் இருந்து ஈரோடு வந்த தனியார் பேருந்து, பவானியில் இருந்து வந்த தனியார் பேருந்துகளில் காற்று ஒலிப்பான் பயன்படுத்தியது தெரியவந்தது.   
இந்தப் பேருந்துகளை போக்குவரத்து போலீஸார் தடுத்து நிறுத்தி தலா ரூ.200 அபராதம் விதித்தனர். இதில் கொளத்தூரில் வந்த தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துனர் போக்குவரத்து போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அபராதத்தைக் கட்டாமல் பேருந்தை எடுத்துச்சென்று விட்டதாக கூறப்படுகிறது.

More from the section

ஈரோடு மக்களவைத் தொகுதி: 13 நாள்களில் ரூ.40 லட்சம் பறிமுதல்
கொங்கு வேளாளர் பாலிடெக்னிக் கல்லூரியில் யமஹா பயிற்சிப் பள்ளி துவக்கம்
பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரியில் சாதனையாளர் விருது வழங்கும் விழா
பெருந்துறையில் ரூ.1.65 கோடிக்கு கொப்பரை ஏலம்
8 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு 8,050 வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு