சனிக்கிழமை 23 மார்ச் 2019

பெங்களூரு கல்லூரியுடன் கொங்கு கலை அறிவியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

DIN | Published: 19th February 2019 07:56 AM

கொங்கு கலை, அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), பெங்களூரு புனித ஜோசப் கல்லூரிகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
கொங்கு கலை, அறிவியல் கல்லூரித் தாளாளர் ஏ.கே.இளங்கோ, புனித ஜோசப் கல்லூரி முதல்வர் டேனியல் பெர்ணான்டஸ் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இதன் மூலம், இக்கல்லூரிகளுக்கிடையே ஆசிரியர், கல்வி, சுயதொழில் பயிற்சி, ஆய்வுகள், திறன்சார் பயிற்சி, ஆய்வக வசதிகள் உள்ளிட்டவை பரிமாற்றம் செய்யப்படும். இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் கல்லூரிகளின் கல்வித் தரம், ஆசிரியர்களின் திறன் மேம்படும். 
இரண்டு கல்லூரிகளின் கருத்தரங்கம் மற்றும் ஆய்வரங்கம் ஒருங்கே நடைபெறும். இந்த ஒப்பந்தம் இப்பகுதி மாணவர்களின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுக்கு உதவியாக இருக்கும் என கொங்கு கலை, அறிவியல் கல்லூரியின் தாளாளர் இளங்கோ தெரிவித்தார்.

More from the section

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல்  காணிக்கை ரூ. 84.32 லட்சம்
100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி கோலப் போட்டி
ஈரோடு முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா

நந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு தினம்: 
300 பேருக்கு பணி நியமன ஆணை

பறவைகள் சரணாலயத்தில் உலக வன நாள்