சனிக்கிழமை 23 மார்ச் 2019

லாரி மீது கார் மோதி தம்பதி சாவு; 3 பேர் காயம்

DIN | Published: 19th February 2019 07:50 AM

பெருந்துறை அருகே, நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் கார் மோதியது. இதில், கணவன், மனைவி உயிரிழந்தனர். அவர்களது மகள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருப்பூர் மாவட்டம், பொங்கலூரைச் சேர்ந்தவர் பங்காரு (80). தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் அலுவலராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மனைவி ஜெயலட்சுமி (70). திருச்செங்கோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பங்காரு, ஜெயலட்சுமி, இவர்களுடைய மகள் ரேவதி (44), பேரன் பங்காரு சுதர்சனகுமார் (22), பேத்தி அலமேலு பிரியதர்ஷினி ஆகியோர் காரில் சென்றனர். திருமணம் முடிந்ததும் அவர்கள் அனைவரும் மாலையில், திருப்பூர் மாவட்டம், குன்னத்தூரில் உள்ள தங்களது உறவினர் வீட்டுக்கு காரில் சென்றனர். காரை, பங்காரு சுதர்சனகுமார் ஓட்டினார். பெருந்துறை- குன்னத்தூர் சாலையில், கராண்டிபாளையம் பிரிவு அருகே சென்றபோது, சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் மோதியது. இந்த விபத்தில், ஜெயலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் படுகாயம் அடைந்த பங்காரு, ரேவதி, பங்காரு சுதர்சனகுமார், அலுமேலு பிரியதர்ஷினி ஆகியோர் பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு, பங்காரு உயிரிழந்தார்.
ரேவதி, பங்காரு சுதர்சனகுமார், அலமேலு பிரியதர்ஷினி ஆகியோர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

More from the section

கொங்கு பாலிடெக்னிக் மாணவர்களுக்கு பணி ஆணை வழங்கும் விழா
பெருந்துறையில் ரூ. 45 லட்சம் பறிமுதல்
தாளவாடியில் முட்டைகோஸ் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
தமிழக அணிக்கு பெருந்துறை விவேகானந்தா பள்ளி மாணவர்கள் தேர்வு
பெருமாநல்லூர் அருகே ரூ.72 ஆயிரம் பறிமுதல்