புதன்கிழமை 20 மார்ச் 2019

கொங்கு கலை, அறிவியல் கல்லூரியில் ஆடை அலங்கார அணிவகுப்பு

DIN | Published: 22nd February 2019 07:56 AM

ஈரோடு கொங்கு கலை, அறிவியல் கல்லூரியில் ஆடை வடிவமைப்பு மற்றும் அலங்காரத் துறை சார்பில் "ஃபேஷன் காலா 2019' என்ற ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.  
இந்நிகழ்ச்சியை கல்லூரித் தாளாளர் எ.கே. இளங்கோ, முதல்வர் என்.ராமன் ஆகியோர் தலைமை வகித்து தொடங்கிவைத்தனர். துறைத் தலைவர் எஸ்.மஞ்சுளா வரவேற்றார். 
பாரம்பரியம், கலாச்சாரம், கருப்பு- வெள்ளை ஆடைகள், குழந்தைகள் வன்கொடுமைத் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ, மாணவிகள் ஆடைகளை வடிவமைத்து, அணிந்து வந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.  இதில் இளங்கலை, முதுகலை மாணவ, மாணவிகள் 75 பேர் பங்கேற்றனர். 
நிகழ்ச்சியில் ஈரோடு பரணி சில்க்ஸ் உரிமையாளர் ஆர்.நிஷா, ஈரோடு மோட்டிப் டிசைன் பொட்டிக் நிறுவனர் எஸ்.எம்.குருராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கினர்.

More from the section

மார்ச் 20 மின்தடை 
பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்ச் 21 இல் பங்குனி உத்திரத் தேர்த் திருவிழா


சென்னிமலை நஞ்சுண்டேசுவரர் கோயிலில் பங்குனி மாத சிறப்பு வழிபாடு

வேட்பு மனு தாக்கல் இன்று துவக்கம்: ஆட்சியர், கோட்டாட்சியர் 
அலுவலகங்களில் மனு அளிக்கலாம்

ஈரோடு மக்களவைத் தொகுதி  அதிமுக வேட்பாளர்