புதன்கிழமை 20 மார்ச் 2019

தாளவாடி அருகே தேங்காய் நார் உரிக்கும் ஆலையில் தீ விபத்து: ரூ.50 லட்சம் மதிப்பில் இயந்திரங்கள், பொருள்கள் எரிந்து சேதம்

DIN | Published: 22nd February 2019 07:55 AM

தாளவாடி அருகே தேங்காய் நார் உரிக்கும் ஆலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள், பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைப் பகுதி அண்ணாநகரில், இளங்கோவன் என்பவருக்குச் சொந்தமான தேங்காய் மட்டை உரித்து நார் தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் வியாழக்கிழமை 30க்கும் மேற்பட்டோர் பணியில் இருந்தபோது, ஆலையில் தீப்பிடித்து கரும்புகை வெளியேறியது. தீ மளமளவென பிற இடங்களுக்கும் பரவியது.
இது குறித்து ஆசனூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தீயணைப்பு வாகனம் பழுதானதால், தொழிலாளர்கள் கிராம மக்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.
குடியிருப்புப் பகுதிக்கு அருகே ஆலை இருப்பதால் தீ மேலும் பரவாமல் இருக்க அப்பகுதி மக்கள் தண்ணீர் ஊற்றி அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்தில் நார் தயாரிக்கும் 10க்கும் மேற்பட்ட இயந்திரங்கள் மற்றும் தேங்காய் நார் பொருள்கள் சேதமடைந்ததாகவும் 
இதன் மதிப்பு ரூ.50 லட்சம் எனக்  கூறப்படுகிறது. தீ கொளுந்து விட்டு எரிவதால் 2 கி.மீ. தூரம் வரை புகை மண்டலமாக காட்சியளிக்கின்றது. சுற்றுப்புறத்தில் வசிக்கும் மக்களுக்கு கரும்புகையால் மூச்சுத் திணறல்ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகரில் இருந்து தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது. தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
 

More from the section

மார்ச் 20 மின்தடை 
பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்ச் 21 இல் பங்குனி உத்திரத் தேர்த் திருவிழா


சென்னிமலை நஞ்சுண்டேசுவரர் கோயிலில் பங்குனி மாத சிறப்பு வழிபாடு

வேட்பு மனு தாக்கல் இன்று துவக்கம்: ஆட்சியர், கோட்டாட்சியர் 
அலுவலகங்களில் மனு அளிக்கலாம்

ஈரோடு மக்களவைத் தொகுதி  அதிமுக வேட்பாளர்