சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

ஈரோட்டில் கருணாநிதிக்கு முழு உருவச் சிலை அமைக்கும் பணி தீவிரம்

DIN | Published: 22nd January 2019 01:15 AM

ஈரோடு மாநகராட்சி, 25 ஆவது வார்டு முனிசிபல் காலனி பகுதியில் திமுகவுக்கு சொந்தமான இடத்தில் கருணாநிதியின் முழு உருவச் சிலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இச்சிலை வைக்கும் பணியை திமுக பொருளாளர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் பார்வையிட்டனர். இந்நிலையில், பீடத்தில் கருணாநிதியின் முழு உருவச் சிலை வைக்கும் பணி திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது. 
இப்பணியைப் பார்வையிட்ட ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர் முத்துசாமி கூறுகையில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் முழு உருவச் சிலை, சென்னை அறிவாலயத்தில் அமைக்கப்பட்டது போன்று முனிசிபல் காலனியில் அமைக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. இச்சிலையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 30 ஆம் தேதி திறந்து வைக்கிறார் என்றார்.

More from the section

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்
ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்ட ஆய்வுக் கூட்டம்


சமஸ்கிருத மொழியில் எழுத, படிக்க இலவசப் பயிற்சி

சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.2.78 லட்சத்துக்கு 
எள் விற்பனை


வருவாய் மீட்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை: தனியார் சர்க்கரை ஆலைக்கு எச்சரிக்கை