சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

ஈரோட்டில் மக்கள் குறைதீர் கூட்டம்: 217 மனுக்கள் அளிப்பு

DIN | Published: 22nd January 2019 01:09 AM

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 217 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. 
இக்கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா தலைமை வகித்தார். இதில், முதியோர், விதவை, கணவனால் கைவிடப்பட்டோர், மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, வீட்டுமனைப் பட்டா, வேலைவாய்ப்பு, காவல் துறை நடவடிக்கை, கல்விக் கடன், தொழில் கடன்,  குடிநீர், சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 217 மனுக்களைப் பொதுமக்கள் அளித்தனர். இம்மனுக்கள் துறை ரீதியான விசாரணைக்கு அனுப்பி, உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
இதில், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் பிரபாவதி, மாவட்ட வழங்கல் அலுவலர் சி.ஜெயராமன் உள்பட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
 

More from the section

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்
ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்ட ஆய்வுக் கூட்டம்


சமஸ்கிருத மொழியில் எழுத, படிக்க இலவசப் பயிற்சி

சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.2.78 லட்சத்துக்கு 
எள் விற்பனை


வருவாய் மீட்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை: தனியார் சர்க்கரை ஆலைக்கு எச்சரிக்கை