செவ்வாய்க்கிழமை 19 பிப்ரவரி 2019

பூந்துறைசேமூர் அரசுப் பள்ளியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடக்கம்

DIN | Published: 22nd January 2019 01:12 AM

பூந்துறைசேமூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் பள்ளி முன்பருவக் கல்வி வகுப்புகளுக்கான துவக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. 
விழாவுக்கு, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கே.எஸ்.தெய்வசிகாமணி தலைமை வகித்து தொடங்கிவைத்தார். மொடக்குறிச்சி  வட்டாரக் கல்வி அலுவலர் கே.ராஜேந்திரன், குழந்தைகள் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்களை வழங்கினார். 
அவல்பூந்துறை கூட்டுறவு சங்க இயக்குநர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். பள்ளியின் தலைமையாசிரியர் எஸ்.மகேஸ்வரி வரவேற்றார். பட்டதாரி ஆசிரியர் எஸ்.ரேவதி நன்றி கூறினார்.
இதில், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர், பெற்றோர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

More from the section


ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

சென்னிமலை அருகே சாலை விபத்தில் நெசவுத் தொழிலாளி சாவு
பெங்களூரு கல்லூரியுடன் கொங்கு கலை அறிவியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
லஞ்சம்: கோபி கோட்டாட்சியர்  அலுவலக உதவியாளர் கைது
ஆங்கில உச்சரிப்புப் பயிற்சி: மாணவர்களுக்கு சான்றிதழ்