வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

ரூ. 50 லட்சம் செலவில் தார் சாலை அமைக்க பூமிபூஜை

DIN | Published: 22nd January 2019 01:14 AM

கொடுமுடி அருகே வெள்ளோட்டாம்பரப்பு பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ. 50 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைப்பதற்கான பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
வெள்ளோட்டாம்பரப்பு பேரூராட்சிக்கு உள்பட்ட அரிக்கான்காட்டூரில் தார் சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக உள்ள நிலையில், அதை புதுப்பிக்க வேண்டி அப்பகுதி மக்கள் பலமுறை மொடக்குறிச்சி சட்டப் பேரவை உறுப்பினர் வி.பி.சிவசுப்பிரமணியிடம் மனு அளித்திருந்தனர்.
தற்போது, நபார்டு வங்கி  நிதி உதவியுடன் ரூ. 50 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலை அமைப்பதற்கான பணியை எம்.எல்.ஏ. சிவசுப்பிரமணியம் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இதில், கொடுமுடி அதிமுக ஒன்றிய உறுப்பினர் புதூர் கலைமணி, முன்னாள் பேரூராட்சி தலைவர் பூரணம் கதிரழகன், பள்ளி கட்டட கழகத் தலைவர் பெரியசாமி, பொதுமக்கள்  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

More from the section

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு
ஈரோடு கோட்டை கோயில்களில் 44 சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்


கொங்கு கலை, அறிவியல் கல்லூரியில் ஆடை அலங்கார அணிவகுப்பு

குடும்பப் பிரச்னை புகார்களை சட்டப் பணிகள் ஆணைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும்: காவல் துறையினருக்கு நீதிபதி அறிவுறுத்தல்
தாளவாடி அருகே தேங்காய் நார் உரிக்கும் ஆலையில் தீ விபத்து: ரூ.50 லட்சம் மதிப்பில் இயந்திரங்கள், பொருள்கள் எரிந்து சேதம்