வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

ரூ. 7.18 லட்சத்துக்கு வேளாண் விளைபொருள்கள் விற்பனை

DIN | Published: 22nd January 2019 01:14 AM

கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 7 லட்சத்து 18 ஆயிரத்து 140 க்கு வேளாண் விளைபொருள்கள் விற்பனையாயின.
கொடுமுடி சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து விவசாயிகள் 4,967 தேங்காய்களை விற்பனைக்குக் கொண்டு வந்தனர். இதில், தேங்காய் கிலோ அதிகபட்சமாக ரூ. 39.45 க்கும், குறைந்தபட்சமாக ரூ. 31.75 க்கும் ஏலம் போயின.
அதேபோல, 156 மூட்டைகளில் கொண்டு வந்த தேங்காய் கொப்பரை ரூ. 6,74,390 க்கு விற்பனையானது. இதில், முதல் தரம் அதிகபட்சமாக ரூ. 123.10 க்கும், குறைந்தபட்சமாக ரூ. 116.70 க்கும், இரண்டாம் தரம் அதிகபட்சமாக ரூ. 116.35 க்கும், குறைந்தபட்சமாக ரூ. 75.35 க்கும் விற்பனையாயின. மொத்தம், ரூ. 7 லட்சத்து 18 ஆயிரத்து 140 க்கு வேளாண் விளைபொருள்கள் விற்பனையாயின.

More from the section

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு
ஈரோடு கோட்டை கோயில்களில் 44 சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்


கொங்கு கலை, அறிவியல் கல்லூரியில் ஆடை அலங்கார அணிவகுப்பு

குடும்பப் பிரச்னை புகார்களை சட்டப் பணிகள் ஆணைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும்: காவல் துறையினருக்கு நீதிபதி அறிவுறுத்தல்
தாளவாடி அருகே தேங்காய் நார் உரிக்கும் ஆலையில் தீ விபத்து: ரூ.50 லட்சம் மதிப்பில் இயந்திரங்கள், பொருள்கள் எரிந்து சேதம்