சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

வாய்க்காலில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் மாயம்

DIN | Published: 22nd January 2019 01:12 AM

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே வாய்க்காலில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவரை போலீஸார், தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த குத்தப்பட்டியைச் சேர்ந்தவர் சுந்தரராஜ். இவரது மகன் திவாகர் (20). இவர், பெருந்துறையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கி, 3 ஆம் ஆண்டு இயந்திரவியல் படித்து வருகிறார். 
ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் தனது நண்பர்களுடன் பெருந்துறை - ஈரோடு சாலையில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் குளிக்கச் சென்றபோது, காணாமல் போயுள்ளார். 
இதுகுறித்து, பெருந்துறை போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 
பெருந்துறை தீயணைப்புத் துறை வீரர்கள் மாணவரைத் தேடி வருகின்றனர்.
 

More from the section

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்
ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்ட ஆய்வுக் கூட்டம்


சமஸ்கிருத மொழியில் எழுத, படிக்க இலவசப் பயிற்சி

சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.2.78 லட்சத்துக்கு 
எள் விற்பனை


வருவாய் மீட்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை: தனியார் சர்க்கரை ஆலைக்கு எச்சரிக்கை