புதன்கிழமை 24 ஏப்ரல் 2019

பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்ச் 21 இல் பங்குனி உத்திரத் தேர்த் திருவிழா

DIN | Published: 19th March 2019 07:56 AM

ஈரோடு மாவட்டம், கோபி வட்டம் பச்சைமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திரத் தேர்த் திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது.
 இதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை யாகசாலை பூஜை, மாலை 5 மணிக்கு ஆட்டு கிடாய் வாகனத்தில் சுவாமி தேர்வீதி உலா வருதல், மாலை 6.30 மணிக்கு மகாதீபாரதனையும், இரவு 7 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் தங்க ரதத்தில் சுவாமி திருவீதி உலா வருதல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
 பின்னர் புதன்கிழமை காலை யாகசாலைபூஜை, காலை 9 மணிக்கு அருள்மிகு சண்முகருக்கு சிகப்பு சாத்தி சாத்தப்படும். மாலை மகாதீபாரதனையும், இரவு 7 மணிக்கு தங்கரதத்தில் சுவாமி திருவீதி உலா.
 வியாழக்கிழமை காலை 6 மணிக்கு மகன்யாக அபிஷேகம், காலை 7.30 மணிக்கு திருப்படி பூஜை விழாவும், காலை 8 மணிக்கு சண்முகருக்கு பச்சை சாத்தி சாத்தப்படும். காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை காவடி, பால்குடம்,  அபிஷேகம் நடைபெறும். மாலை 4 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், மாலை 6.30 மணிக்கு அலகு குத்துதல் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் தங்க ரதத்தில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெறுகிறது.
வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு யாகபூஜை, காலை 11.30 மணிக்கு அபிஷேகம், மகாதீபாரதனை, மாலை 5 மணிக்கு பரிவேட்டை, பின்னர் குதிரை வாகனத்தில் சுவாமி தேர்வீதி, மாலை 6.30 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் சமேத சண்முகப்பெருமாள் மலர்ப் பல்லக்கில் நகர் வலம் வருதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் அ.சீனிவாசன், திருப்பணிக்குழுத் தலைவர் பி.கே.ஈஸ்வரன் மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.
 

More from the section

மாதேஸ்வரன் கோயில் குண்டம் திருவிழா
மாநகராட்சிப் பகுதியில் மழை நீர் தேங்காதவாறு நடவடிக்கை: ஆணையர்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனச் சுற்றுலா மீண்டும் துவக்க கோரிக்கை
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு
பிளஸ் 2 தேர்வு: மீனாட்சி சுந்தரனார் செங்குந்தர் பள்ளி சிறப்பிடம்