புதன்கிழமை 16 ஜனவரி 2019

ஓவேலி வனப் பகுதி பழங்குடி மக்களிடம்  குறைகளைக் கேட்டறிந்த காவல் துறையினர்

DIN | Published: 12th September 2018 05:22 AM

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி வனப் பகுதியிலுள்ள பழங்குடி மக்களிடம் காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை குறைகளைக் கேட்டறிந்தனர்.
நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா உத்தரவின்பேரில்,   காவல் துணைக் கண்காணிப்பாளர் ரவிக்குமார் ஓவேலி எல்லமலைப் பகுதியிலுள்ள குறும்பர்பாடி பழங்குடிக் கிராமத்தில் மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். 
நிகழ்ச்சியில் சுமார் 50 பேர் கலந்துகொண்டு தங்கள் பகுதியிலுள்ள குறைகளை எடுத்துரைத்தனர். அவர்களின் கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துணைக் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.  இந்நிகழ்ச்சியில்,  நியூஹோப் காவல் உதவி ஆய்வாளர் பிரகாஷ்,  உதவி ஆய்வாளர் ராஜாமணி,  தனிப் பிரிவுக் காவலர் மோகன்தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

More from the section

யானைகள் ஊருக்குள் வருவதைத் தடுக்க வீடுகளில் வாழை, பலா மரங்களை வளர்க்க வேண்டாம்: வனத் துறை அறிவுறுத்தல்


அரசுப் பேருந்து மோதி இளைஞர் சாவு

நுண்கடன் என்ற பெயரில் கந்துவட்டி: மகளிர் குழுவினர் புகார்


தமிழ்ச் சங்கம் சார்பில் பொங்கல் கலை இலக்கிய விழா

மார்க்சிஸ்ட் சார்பில் ஜனவரி 27 இல் நீலகிரியில் கண்டன ஆர்ப்பாட்டம்